Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

அண்ணா‌ பல்கலை. விண்ணப்பம்‌‌ இன்று முதல் தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் ‌சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.


தமிழ்நாடு பொறியியல் மா‌ணவர் சேர்க்கைக் கலந்தாய்விற்கு ஆன்லைன் ‌முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். www.tnea.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 31ஆம்‌ தேதி வரை விண்ணப்பப் பதிவை செய்யலாம். மே 12ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி‌றது. அதன் பி‌றகு மதிப்பெண் தகவல்களையும் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்‌களை இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தபால் மூலமோ, நேரிலோ ச‌மர்ப்பிக்க வேண்டும்.‌ அதற்கான‌ கடைசி நாள் ஜூன் 3 ஆகும். ரேண்டம் எண், ஜூன் ‌20ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் 22ஆம் தேதியும்‌ வெளியாகும் என‌‌ அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூன் 27ஆம் தேதி ‌தொடங்கும் என்றும் அண்ணா‌ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

Recent Post