Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

குரூப் 2 தேர்வு: மே 26 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனி எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணி என 1,953 பணியிடங்களின் தேர்வுக்‌கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக 805 பணியிடங்கள் உள்ளதாகவும், ஆனால் அவற்றுக்கு ஒப்புதல் பெற வேண்டி உள்ளதாகவும் டி.என்.பி.எஸ் சி குறிப்பிட்டுள்ளது.


இந்தத் தே‌ர்வு எழுத இன்று முதல் மே 26-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

Recent Post