Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

கவுதம் கார்த்திக் ஹீரோயினுக்கு ஆபாச போட்டோ அனுப்பி மாணவர் தொல்லை

மும்பை: நடிகை சோனாரிகா பதோரியாவுக்கு 8 மாதமாக தொல்லை கொடுத்து வந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் சோனாரிகா பதோரியா. தேவோன் கி தேவ் மகாதேவ் டிவி நிகழ்ச்சியில் பார்வதியாக நடித்து பிரபலம் ஆனவர் சோனாரிகா.

கவுதம் கார்த்திக்கின் இந்திரஜித் படத்தின் நாயகி அவர் தான்.

செல்போன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குர்கெதா கிராமத்தை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோனாரிகாவின் செல்போன் எண் கிடைத்துள்ளது.

தொல்லை

செல்போன் எண் கிடைத்ததில் இருந்து அந்த மாணவர் சோனாரிகாவுக்கு அசிங்கமான மெசேஜ், புகைப்படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சோனாரிகா

சோனாரிகா அந்த மாணவரின் எண்ணை பிளாக் செய்தபோது அவர் புதிய எண்ணில் இருந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சுமார் 7-8 மாதமாக அவர் சோனாரிகாவுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

போலீஸ்

மாணவரின் தொல்லை தாங்க முடியாமல் சோனாரிகா அவர் மீது மும்பை போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அந்த மாணவரை தற்போது கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Recent Post