ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி முகத் திடலில் இன்று நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட நேற்று சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்hறு பதிலளித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்…
மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரச்சினைகளை சவால்களை எதிர்நோக்கி மேலும் தைரியமாக நாம் முன்நோக்கி நகர்வோம்.
அரசாங்கமும் அரசாங்கத் தரப்புக்களும் நகைச்சுவை வழங்கி வருகின்றது.அரசாங்கமொன்று மக்களுக்கு நகைச்சுவை வழங்கக்கூடாது.
காலி முகத் திடலிலிருந்து நாலா புறமும் பார்க்கும் போது கடந்த அரசாங்க ஆட்சிக் கால கட்டிட நிர்மாணங்களையே காண முடிகின்றது.
இந்த அரசாங்கம் அதனை அங்குரார்ப்பணம் செய்யவே முயற்சிக்கின்றது.
காலி முகத் திடலின் எந்தவொரு மூலையில் மே தினக் கூட்ட மேடை அமைத்தாலும் அது அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment