ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரை விலை மலிவான சாதாரணப்பொருட்களிலும் நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின் பலன்கள் பின்வருமாறு:
அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடிய கீரை வகைகளில் இது முதன்மையானது. எல்லா நோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்வைச் சிறப்பாக வைத்திருபதற்கு இந்தக்கீரை பயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமான மகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்
வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.
மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண், வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்டசஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள். மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.
பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில் வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.
வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள், மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்
கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம் ஒருமுறை இக்கீரையை உண்டுவர மூட்டுவலி,இடுப்புவலி போன்றவை நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.
முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும் தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு பசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின் போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.
அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்டநரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில் உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர் உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும் உண்ணத்தக்கது.
கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மையடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.
புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானது என வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவை கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.

எங்க பக்கம் முள்ளங்கியும் கீரையுடனேதான் கிடைக்கும்
ReplyDeleteஅதன் சுவை சிறிது துவர்ப்பா இருந்தாக்கூட வெங்காயம் தக்காளி சேர்த்து செய்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் உடம்புக்கும் மிகவும் நல்லது.
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html
மிக்க நன்றி raji
ReplyDeleteநன்றி லக்ஷ்மி
ReplyDelete