Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011

நமது தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே போட்டியில் கலந்துக்கொள்ளும் வகையில் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது:- http://www.tamilthottam.in/t20084-2011

போட்டியின் விபரங்கள் இதோ:-


1. கவிதை போட்டி
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்

2. கதை போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்

3. கட்டுரை போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்

4. நகைச்சுவை போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்

5. அனுபவங்களை பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்

6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க

7.புகைப்பட போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பை சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...


அப்ப பெண்களுக்கு எதுவுமே இல்லையான்னு கேட்கும் மங்கையர் குல திலகங்களுக்காக இதோ...

9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.



போட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பா கலந்துக்கொள்ளும்படி இருப்பதால்
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க....
எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...

இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!


மேலும் தகவல்களுக்கு வாங்க தமிழ்த்தோட்டம் www.tamilthottam.in

3 comments:

  1. நல்ல விஷயம் போட்டிகள் சிற்ப்பாக நடக்க வாழ்த்துக்கள். அனைவரும் பங்கேற்கவும்..

    ReplyDelete
  2. சிறப்பான போட்டிகளுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நன்றி லக்‌ஷ்மி மற்றும் இரஜராஜேஸ்வரி

    ReplyDelete

Recent Post