Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

கம்பளையில் மனைவியை கொலை செய்த கணவர் சிக்கினார்

கம்பளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டதாகவும் குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர் 44 வயதையுடைய அலவதுகொட பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட குறித்த பெண் அவரது மகன் கலந்து கொண்ட நிகழ்வொன்றை பார்வையிட கணவனுடன் சென்றுள்ளார்.
இதன்போது, வேறு ஒரு நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகம் கொண்ட கணவர் அந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை குறித்த இடத்தில் இருந்த சிலர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


    Best Digital Marketing Agency in Chennai
    Best Content Marketing companies in Chennai
    Best SEO Services in Chennai
    leading digital marketing agencies in chennai
    digital marketing agency in chennai
    best seo company in chennai
    best seo analytics in chennai

    ReplyDelete

Recent Post