Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

தனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா?


பாரிய கருத்து மோதல்களை சந்தித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்து மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.

மே தினக் கூட்டங்கள் தொடர்பாக சிறிசேன அணியின் சுவரொட்டி ஜனாதிபதி சிறிசேன அணியின் மே தினக் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை கண்டியில் நடைபெறவுள்ளது.

கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளுக்கு அமைய வழிநடத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறிய அவர், கட்சியை ஆதரிக்கும் சகல தரப்பினரும் தனது அணியுடன் சேரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திக கட்சியை காக்க வேண்டுமானால் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சக பதவிகளை வகித்துவரும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்து தனது அணியுடன் இணைந்து கொள்ள வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மைத்ரிபால சிறிசேன அணியின் அங்கம் வகிக்கும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியை ஆதரிக்கும் சகல தரப்பினரும் தனது அணியுடன் ஒன்று சேரவுள்ளாதாக தெரிவித்தார்.

கட்சியை சேர்ந்த சிலர் தனியாக நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தின் மூலம் சுதந்திரக் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயல்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் கட்சி தலைமைத்துவத்தை தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது
அந்த பின்னர் கட்சியின் கட்சியின் இரு பிரிவினரும் பகிரங்கமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருவது .காணக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment

Recent Post