Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

ரோகித் சர்மா சரவெடி.. பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

மும்பை: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு விராட் கோஹ்லி, மந்தீப் சிங் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினர். மந்தீப் சிங் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். விராட் கோஹ்லி 20 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்னில் வெளியேற, டி வில்லியர்ஸ் 27 பந்தில் 43 ரன்கள் குவித்தார். கேதர் ஜாதவ், 28 ரன்னும், நெஹி 35 ரன்களும் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டாகினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 3 விக்கெட்டும், குருணால் பாண்ட்யா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதன் பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். (6 பவுண்டரி, 1 சிக்ஸ்) பட்லர் 21 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் ராணா 27, பொல்லார்டு 17 ரன்களும் எடுத்தனர்.

No comments:

Post a Comment

Recent Post