Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்களுக்கு ...


வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் தங்கள் ஆறு மாத கால முதல் வேலைக்கு செல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.. ஏனெனில் அந்த மாத காலத்தில் நன்கு சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்..அது தான் சி-சுவிற்கும் தாய்க்கும் சிறந்ததாகும்...

கர்ப்ப காலங்களில் கால அட்டவணைப்படி நேரத்திற்கேற்ப நன்கு சாப்பிட வேண்டும்...சரியான உணவு மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக முக்கியத்துவம்.வேலை செய்யும் இடத்தில் ஆற்றலை நிலைக்க வைக்கும் சத்தான கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்..

நீங்கள் கர்ப்பம் தரித்த உடனே உங்கள் முதலாளியிடம் தெரியப்படுத்த வேண்டும்...சந்தேகத்திற்குறிய சில பெண்கள் தங்கள் கர்ப்பங்களை இரண்டாவது அல்லது மூன்றாவது மாத காலத்தில் தங்களுடைய கர்ப்பங்களை தெரிவு செய்திட வேண்டும்..

நீங்கள் கர்ப்பம் குறித்த தகவலை தெரியப்படுத்தும் போது குழந்தை பிறந்த பின்பு வேலைக்கு வரலாம் என விடுப்பு தருவார்கள்..

கருத்தரித்த ஆரம்பத்தில் இருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட நேரிடும்..

கர்ப்பிணி பெண்கள் தளர்வாக இருக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.இருக்கமான ஆடைகளை அணிவதன் மூலம் இயல்பாக மூச்சி விட முடியாது, குழந்தைக்கும் அதிக அழுத்தம் தர கூடும்..அதனால் இருக்கமாக ஆடைகளை தவிர்க்கலாம்.

நீங்கள் கர்ப்பம் தரித்த காலத்தில் அதிக வேலைகளை செய்வதை தவிர்த்திடுங்கள்..குறைந்த அளவு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்..

கண்டிப்பாக வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் பாதி நேர வேலையை உங்களுக்கேற்பால் மாற்றி கொள்ள வேண்டும்...உங்கள் வேலை ஆபத்தான ரசாயன பொருட்களோடானது என்றால் உடனடியாக முன்னெச்சரிக்கையோடு நின்று விட வேண்டும்.அது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து ஏற்படுத்தும்

நிறுவனத்தின் மகப்பேறு கொள்கைகள் பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்..அது உங்களின் உரிமை..அது பற்றி உங்கள் மேற்பார்வையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்..

மாதமாதம் கண்டிப்பாக மருத்துவமனை சென்று இரத்தபரிசோதனை செய்வது மிக அவசியம்.ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள முடியும்

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் அதிக தண்ணீர் அருந்த வேண்டும்..இருக்கையில் அமர்ந்து வேலை செய்துவிட்டு எழும்போது கவனமாக எழ வேண்டும் வயிற்றில் ஏதேனும் அடிக்க நேரிடும்

இயல்பாக கர்ப்பிணி பெண்களுக்கு மயக்கம் வருவது இயல்பு அதனால் தனியாக வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர் பாட்டில் அல்லது ஜீஸ் எடுத்து கொண்டு செல்ல வேண்டும்..

No comments:

Post a Comment

Recent Post