Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

கோடை‌‌க் கால நோ‌ய்‌களை‌த் த‌வி‌ர்‌க்க...

வெயில் காலம் வந்துவிட்டால், வெக்கைக்குப் பஞ்சமிருக்கிறதோ இல்லையோ, வெயில் கால நோய்களுக்கு ஒரு பஞ்சமும் இல்லை. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்கள் பொதுவாக நம் வீட்டு வாண்டுகளைத் தான் பெரும்பாலும் வாட்டி எடுக்கிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்க்கு வெயிலை குறைசொன்னால் மட்டும் போதாது. நோய் ஏற்படும் அளவிற்கு நம் உடம்பை கவனிக்காமல் விடுவதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது...

வெயில் காலங்களில் ஏற்படும் நோய்கள்

வே‌ர்க்குரு
நீர்ச் சத்து இழப்பு
தோல் சுருக்கங்கள்
மஞ்சள் காமாலை
அம்மை
கண் நோய்
சிறுநீர் கடுப்பு
வயிற்றுப்போக்கு
தொண்டை சம்மந்தப்பட்ட நோய்கள்

நோய் ஏற்படக் காரணங்கள்!

வெளியில் செல்லும்போது தாகம் எடுக்கும்போது, பார்ப்பதை எல்லாம் வாங்கிக் குடிப்பது

எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது

குளுமையான உணவுகளை உணவில் சேர்க்காதது

தடுப்பூசி போடாமல் இருப்பது

வெளியில் செல்லும்போதோ, விளையாடும்போதோ வெப்பத் தடுப்பு கண் கண்ணாடி அணியாமல் இருப்பது

கை, கால் கழுவாமல் உணவை உட்கொள்வது

நோயைத் தடுக்க என்ன வழி!

கடைகளில் விற்கும் கலர் கலரான குடிபானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், மோர் அருந்தலாம். நீர் சத்து அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய் சாப்பிடலாம். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துகொள்ளலாம். தண்ணீரும் அதிகளவில் குடிக்க வேண்டும்.

வெயில் காலங்களில் வெப்பக் கட்டிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், எண்ணெயில் செய்த பலகாரங்களைத் தவிர்த்து, எளிதில் ஜீரணிக்கக் கூடிய பொருட்களை சாப்பிடலாம்.

சில குழந்தைகளிடம் எப்போதும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் வெயில் காலங்களில் அதைத் தவிர்த்து சாதாரண தண்ணீரிலேயே அவர்களை ஜில்லென்று குளியல் போட‌ச் சொல்லலாம்.

நன்றி http://www.tamilthottam.in/t20504-topic

1 comment:

Recent Post